இலங்கை வந்ததுள்ள மார்ட்டின் பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு.

அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் இலங்கை வந்துள்ளார்.

டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே 652 என்ற விமானத்தில் அவர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவர் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்திக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்புக்கு அமைய அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது என்று நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதேவேளை, அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினரையும் அவர் சந்திக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.