இலங்கை இளைஞர் சமூகம் மேல் நம்பிக்கை : வழக்கறிஞர் சங்கத்திற்கு பாராட்டுக்கள்! – அமெரிக்க தூதுவர்.

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டம், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்காக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்தார்.

இலங்கை யூத் முஸ்லிம் அமைப்பைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டை அமைதியான, ஐக்கியமான மற்றும் வளமான நாடாக மாற்ற இலங்கையின் இளைஞர் சமூகம் பாடுபடுகிறது என ஜூலி சாங் மேலும் தெரிவித்தார்.

புதிய தலைமுறை தலைவர்கள் ஏனைய சமூகங்களை மதித்து அவர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உட்பட சட்டத்தரணிகள் சமூகம் உண்மையைப் பிரகடனப்படுத்தி சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.