பொது வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

சமகாலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலயைக் கருத்திற்கொண்டு பொது வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஜே. ஜே. பவுண்டேசன் அமைப்பின் மூலம் நாட்டின் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு கல்நேவ பிராந்திய வைத்தியசாலைக்கும் மற்றும் கலாவௌ கிராமிய ஆகிய இரு வைத்தியசாலைகளுக்கு மருத்துவப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஜே. ஜே. பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஐ. வை. எம். ஹனீப் இந்த இரு வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்து குறித்த இரு வைத்தியசாலையின் பணிப்பாளர்களிடம் இந்த மருத்துவப் பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மேலும் இதன் போது வைத்தியசாலையின் பணிப்பாளர்களுக்கு வேண்டுகோளுக்கு இணங்க தேவையான மருத்துப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்க ஜே. ஜே. பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஐ. வை. எம். ஹனீப் இணக்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தாதிமார்கள், கம்பளை ஹக்கீயா அரபுக் கல்லூரியின் அதிபர் உஸைன்தீன், நெல்லியகம ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதான இமாம் முஆத் மர்சூக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.