சமயங்களுக்கிடையே புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தைம் சகவாழ்வையும் ஏற்படுத்தும் விஜயம்.

சமயங்களுக்கிடையே புரிந்துணர்வையும், நாட்டின் தேசிய நல்லிணக்கத்தைம் தேசிய சகவாழ்வையும் ஏற்படுத்தும் நோக்கில் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசல், அரபுக் கல்லூரிக்கு பௌத்த சமயத் தலைவர்கள் விஜயம் மேற்கொண்டனர்.

நாட்டில் நல்லிணக்கத்தைம் சகவாழ்வையும் ஏற்படுத்தும் நோக்கில் அலவத்துக்கொட கொனகலகல விஹராதிபதி தலைமையிலான பௌத்த சமய தேரர் குழுவினர்கள்; கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் கட்டுக்கலை அல் புர்க்கானிய்யா அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்து ஜும்ஆப் குத்பா சொற்பொழிவினையும் மத்ரஸா மற்றும் அங்கு அமைந்துள்ள நூதனசாலை போன்ற இடங்களைப் பார்வையிட்டனர்.

கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற குத்பா பேருரையினையும் அரபு கல்லூரியின் வகுப்பறைகள், நூலகம், கற்பித்தல் முறைமைகள், நூதனசாலை போன்றவற்றைப் பார்வையிட்டு இஸ்லாமிய சமயக் கடமைகள் போன்ற விளக்கங்களையும் தெளிவுகளையும் பெற்றுக் கொண்டதோடு அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு பௌத்த பிரிவினா போன்ற இடங்களைப் பார்வையிட்ட பௌத் தேரர்கள் தங்களுடைய இடங்களுடையும் வருகை தந்து பார்வையிடுமாறு அங்கு வருகை தந்த பிரதான பௌத்த தேரர் அன்பான கோரிக்கை விடுத்தார்.

இதன் போது கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளரும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். சித்தீக் உள்ளிட்;ட பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகஸ்தர்கள், அரபுக் கல்லூரி அதிபர், மௌலவிமார்கள் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் டப்லியூ. டி. எல். சிரிவர்தன உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.