2026க்குள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்: ஆய்வில் தகவல்

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், இந்தியாவில் அமெரிக்க டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சுவிஸ் உலக சொத்து அறிக்கை 2022 ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. சீனாவிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்தநிலை விலகி, வருவாய் உயரத் தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான கிரெடிட் சுவிஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் ஆண்டு உலக சொத்து அறிக்கை 2022 ஆய்வின்படி, உலகின் முதல் 500 கோடீஸ்வரர்கள் ஆண்டின் முதல் பாதியில் குறைந்தது 1.4 டிரில்லியன் மொத்த சொத்துக்களை இழந்துள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், வளரும் சந்தைகளால் விரைவில் அவர்கள் மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.25 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டில் 8.75 கோடியாக உயரும் குறைந்தபட்சம் 1 கோடிக்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள், இது 2021 இல் 62.5 மில்லியனிலிருந்து அதிகரிக்கும். சீனா, அதன் கோடீஸ்வர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதில் கவனமாக உள்ளது. இதற்கிடையில், அதே ஆண்டில் இந்தியாவும் அமெரிக்க டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவில் 7.96 லட்சம் கோடீஸ்வரர்கள் இருந்தனர், தற்போது கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த எண்ணிக்கை 20126 இல் 105 சதவீதம் அதிகரித்து 16.23 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டைவிட இந்த எண்ணிக்கை 2 சதவீதம் அதிகமாக இருக்கும். அதேபோன்று உலக அளவில் முதல் 10 கோடீஸ்வரர்கள் வசம் மட்டும் 82 சதவீதம் சொத்துகள் உள்ளது.

அதேபோல், 2021 இல் சீனாவில் 62 லட்சம் போர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 2026 இல் 97 சதவீதம் அதிகரித்து 1.2 கோடியாக அதிகரிக்கும் என்றும், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் 13 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீடுகளின்படி, 2026 ஆம் ஆண்டில் உலக அயளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 87 மில்லியனைத் தாண்டும், அதாவது 2021 இல் இருந்து 25 மில்லியன் உயரும்.

தற்போது, ​​அமெரிக்கா உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து சீனா 2 ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம் உலகின் கோடீஸ்வரர்களில் இந்தியாவில் சுமார் 1 சதவீதம் பேர் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்காவில் 39 சதவீதம் பேர் உலகின் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

கிரெடிட் சுவிஸ் கணிப்புகளின் படி, 2026 ஆம் ஆண்டு தனி கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 36 சதவீதம் உயரும் என்றும் கணித்துள்ளது.

“அடுத்த அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வர்கள் கொண்ட நாடுகளின் கோடீஸ்வரர் பட்டியலில் சிறிதளவிலான மாற்றங்களை மட்டுமே எதிர்பார்க்கலாம், அதாவது ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில். இருப்பினும், கொரியா, தைவான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இடம் பெற்றுள்ளன.

இந்தியா மற்றும் ஹாங்காங் இடையேயான இடைவெளி குறைவதற்கு அல்லது மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவில், 2026 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மொத்தம் 1.6 மில்லியனாக உயரும், இது இன்றைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்” என்று கிரெடிட் சுவில்ஸ் கூறியுள்ளது.

உலகளவில் 2021 இன் இறுதியில் 62.5 மில்லியன் கோடீஸ்வரர்கள் இருந்தனர், இது முந்தைய ஆண்டை விட 5.2 மில்லியன் அதிகம்.

2000 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வயது வந்தோருக்கான சொத்து மதிப்பு சராசரி ஆண்டு விகிதத்தில் 8.8 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 15,535 டாலராக இருந்தது, இது உலக சராசரியை விட மிகக் குறைவு என்றும் அறிக்கை கூறுகிறது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவின் சராசரி செல்வம் உலக மதிப்பில் 41 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் சீனாவில் சராசரிச் செல்வம் 338 சதவீதம் உயர்ந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்கா அதிக குடும்பச் செல்வத்தைச் சேர்த்ததால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து சீனா, கனடா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய குடும்பச் சொத்து மதிப்பு 9.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுதலாக, ரஷியா-உக்ரைனுக்கு இடையிலான போரால் சந்தித்து வரும் இழப்புகள் மற்றும் விலை உயர்வுகள் மத்தியிலும், அடுத்த 5 ஆண்டுகளில், உலகில் உள்ள கோடீஸ்வர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 4.2 சதவீத வளர்ச்சிக்கு மாறாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஆண்டுதோறும் 10 சதவீதம் சொத்து மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், வரவிருக்கும் ஆண்டுகளில் வளரும் பொருளாதாரங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு அறிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது, ​​ஆய்வறிக்கையின் ஆசிரியரும் கிரெடிட் சுவிஸ் பொருளாதார நிபுணருமான ஆண்டனி ஷோராக்ஸ் கூறுகையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் வேகமாக வளர்ந்து வருவதால், “கோடீஸ்வர நாடுகளுக்கும் குறைந்த கோடீஸ்வர நாடுகளுக்கும் இடையிலான வித்தியாசம் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.