உணவு உட்கொள்ளாமல் மாணவர்கள் காலை கூட்டங்களில் மயங்கி விழும் நிலை!

மதவாச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தந்திரிமலை பகுதியில் உள்ள பாடசாலைகளில் காலை கூட்டத்தின் போது சிறுவர்கள் மயங்கி விழுந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

தந்திரிமலை தம்பியாவ கிராமத்தில் உள்ள தர்மபால வித்தியாலயம், கிம்புல்வெவ ஆனந்த வித்தியாலயம் மற்றும் மஹாவிலச்சிய சித்தார்த்தா ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் மயக்கமடைந்துள்ளனர்.

மாணவர்கள் மயங்கி விழுந்ததால் காலை கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் சில குழந்தைகள் முதல்நாள் இரவு மற்றும் காலை இரண்டு வேளையும் சாப்பிடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.