கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்க வந்த பெண் கூட்ட நெரிசலில் பலி.. ஹைதராபாத்தில் சோக சம்பவம்..

டி 20 உலக கோப்பை தொடருக்கு முன், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இம்மாதம் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

போட்டியை காண்பதற்காக டிக்கெட் விற்பனை செய்யப்படும் ஹைதராபாத்தில் உள்ள ஜிம்கானா கிளப் அருகே இன்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

அப்போது டிக்கெட் வாங்க ரசிகர்களுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் கீழே விழுந்து கூட்ட நெரிசலில் மிதிபட்டு படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் டிக்கெட் வாங்க வந்து, கூட்ட நெரிசல் சிக்கிய இளம் பெண் ஒருவர் பலியாகிவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அங்கிருந்த போலீசார் டிக்கெட் வாங்குவதற்காக குவிந்த ரசிகர்களை தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் மட்டுமின்றி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.