ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திலுருந்து லீக்கான வீடியோவால் அதிர்ச்சி.

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினி இப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப காத்துக்கொண்டிருக்கின்றார்.

அதே சமயம் பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் நெல்சன் இருக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து நடிகர் ஜெய் இப்படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு புகைப்படம் லீக்கானது.

இதற்கு முன் நெல்சன் இயக்கிய தளபதியின் பீஸ்ட் படத்திலிருந்து இது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்தன. எனவே அதே நிலைமை ஜெயிலர் படத்திற்கும் வந்துவிடக்கூடாது என நெல்சன் உறுதியாக இருந்தார்.

அதன் காரணமாக படப்பிடிப்பு தளத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்தார். இருப்பினும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு வீடியோ லீக்காகியுள்ளது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ரஜினி இருக்கும் அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக நெல்சன் உட்பட படக்குழு அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.