சென்னை எழும்பூர் உட்பட 7 தெற்கு ரயில் நிலையம் சீரமைப்பு பணி விரைவில் தொடக்கம்!

தெற்கு ரயில்வேயால் சீரமைக்கப்பட இருக்கும் ஒன்பது நிலையங்களில் ஏழு நிலையங்களுக்கு ஒப்பந்தத்தை இன்னும் சில வாரங்களில் வெளியிட உள்ளது. அதோடு, சென்னை எழும்பூருக்கு டெண்டர் திறக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்திய ரயில்வே பிரிவில், தமிழகத்தில் 5, புதுச்சேரியில் 1, மற்றும் கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி சந்திப்பு, மதுரை சந்திப்பு, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதோடு புதுச்சேரி, எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் டவுன் மற்றும் கொல்லம் சந்திப்பு ஆகியவையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன

இந்த ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதில் எழும்பூருக்கான மறுசீரமைப்பு டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கான டெண்டர் அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற ரயில் நிலையங்களுக்கு இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என்று ரயில்வே துறை குறிப்பிட்டுள்ளது.

வசதிகள்: இந்த நிலையம் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையத்தில் இருப்பது போன்ற தனித்தனி வருகை மற்றும் புறப்பாட்டு பாதைகள், பிரகாசமான ஒளிவிளக்குகள் மற்றும் பிளாட்ஃபார்ம்களுக்கு எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் மற்றும் மேம்பாலங்கள், இன்டர்மாடல் இணைப்பு மற்றும் 40 ஆண்டுகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொந்தரவு இல்லாத அணுகல் போன்ற அம்சங்களை அமைக்க இருக்கிறது.

இவை தவிர …..

கும்பகோணம், திருநெல்வேலி சந்திப்பு மற்றும் செங்கனூர் மற்றும் திருச்சூர் ஆகிய நான்கு நிலையங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல், வர்கலா, கோழிக்கோடு மற்றும் மங்களூரு சென்ட்ரல் ஆகிய 8 ரயில் நிலையங்களுக்கான டிபிஆர் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை காட்பாடி ரயில் நிலைய ரயில் நில மேம்பாட்டு ஆணையம் (ஆர்எல்டிஏ) மேற்கொண்டது.

இவை தவிர, மறுவடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வுக்காக 38 நிலையங்களை தெற்கு ரயில்வே கண்டறிந்துள்ளது. ரயில்வே வாரியத்தின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு அதன் பணிகள் தொடங்கும்.

Leave A Reply

Your email address will not be published.