சரிசமமான தங்க இறக்குமதி – ஆபரண ஏற்றுமதி: இந்திய வர்த்தக சமநிலையில் முக்கிய மாற்றம்!

இந்தியாவில் தங்கம் இறக்குமதி கடுமையாக குறைந்துள்ளது.

ஏற்றுமதிக்கு சமமாக தங்கம் இறக்குமதி
இந்தியாவின் தங்க இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் மொத்த நகை மற்றும் ஆபரண ஏற்றுமதிக்கு சமமாக இருந்தது. இது வர்த்தக சமநிலையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்க தரவுகளின்படி, இந்தியா ஆகஸ்ட் 2026-இல் 2.30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. ஆனால், 2025 ஆகஸ்டில் இருந்த 5.44 பில்லியன் டொலர் இறக்குமதியுடன் ஒப்பிடும்போது, இது 58 சதவீதம் குறைவாகும்.

இதனால், ஜூலை மாதத்தில் 31.98 பில்லியன் டொலராக இருந்த நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit), ஆகஸ்டில் 26.86 பில்லியன் டொலராகக் குறைந்தது.

அதே நேரத்தில், நகை மற்றும் ஆபரண ஏற்றுமதி 3.14 சதவீதம் உயர்ந்து 2.30 பில்லியன் டொலர் ஆனது. இதனால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகள் சமமாக (1:1 ratio) இருந்தன.

வர்த்தக சமநிலை
இந்த மாற்றம், அரசு மே 13-ஆம் திகதி தங்க இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்திய பிறகு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை, இந்தியாவின் வர்த்தக சமநிலையை மேம்படுத்தும் வகையில் இருந்தாலும், தங்கத்தின் மொத்த இறக்குமதி கடந்த ஆண்டை விட அதிகமாகவே உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.