விதிமுறைகளை மீறியதாக ஒரே மாதத்தில் 23.28 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்!

மாதம் தோறும் வாட்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை முடக்கி அதன் புள்ளி விவரங்கள் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23.28 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளை நிறுவனம் முடக்கியுள்ளது. முடக்கப்பட்டதில் 10 லட்சம் கணக்குகள் பிறரின் எந்த வித புகாரும் இன்றி நிறுவனமே கண்காணித்து தாமாக முடக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கணக்குகள் மத்திய அரசின் 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக முடக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் இதே போன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 23.87 லட்சம் கணக்குகளை வாட்ஸ் ஆப் முடக்கியுள்ளது. அதேபோல் கடந்த ஜூன் மாதத்தில் 22 லட்சம் கணக்குகளும், மே மாதம் 19 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மாதாமாதம் இந்த ஒழுங்கு நடவடிக்கையானது தொடர்ந்து நடைபெறுகிறது.

பயனாளர்கள் எவ்வாறு புகார் அளிக்கலாம்?

வாடஸ் ஆப் பயனாளர்களுக்கு விதிமுறைகளை யாரேனும் தொல்லை தரும் பட்சத்தில் அவர்கள் புகார் அளிக்கலாம். முறையான அங்கீகாரம் பெறாமல் ஒரே நேரத்தில் ஸ்பாம் செய்திகளை அனுப்பக்கூடிய கணக்குகள், சாதி, மத, இன மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்துபவையாக இருக்கும் கணக்குகள், பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கும் கணக்குகள் ஆகியவை தடை செய்யப்படும்.

முறைகேடான அல்லது ஸ்பாம் கணக்கு என்று அறிந்த கணக்குகள் பற்றிய புகாரை grievance_officer_wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். மேலும், வாட்ஸ்அப் ஒரு உதவி மையத்தை உருவாக்கியுள்ளது. அதில் யூசர்கள் தங்கள் சந்தேகங்களை முன்வைக்கலாம். மேலும், இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் கிரீவன்ஸ் சென்டருக்கு தங்கள் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் புகார்களை கடிதம் மூலமாக அனுப்பலாம்.

ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் கணக்கைப் பற்றி புகார் அளிக்கும் போது, அந்த எண்ணின் நாட்டின் குறியீடுடன் அனுப்ப வேண்டும். உதாரணமாக இந்திய வாட்ஸ்அப் எண்ணை புகார் அளித்தால், +91 என்பதை சேர்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.