பிக்பாஸ் ஜனனி , காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட காரணம் வெளியானது (Update + Video)

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மிகவும் விரும்பப்படும் தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்  ஜனனி , குயின்ஸியின் டவலை தவறுதலாக எடுத்த பிரச்சனையில் , குயின்ஸி , என்னைக் கேட்காமல் ஏன் என் டவளை எடுத்தாய் என ஜனனியை கடிந்து கொண்டார். அதன் பின் ஏற்பட்ட ரகளையில் கோபத்தோடு ஜனனி , குயின்ஸியின் காலில் விழுந்து மன்னித்துக் கொள் என்றார்.

நேற்று இரவு குயின்சி, தனம், ஜனனி, ஷிவின் அனைவரும் நள்ளிரவில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். பின்னர் அந்த ஈரமான உடையோடு வீட்டுக்குள் செல்ல தயங்கிய ஜனனி , மகேஸ்வரியின் டவள் என நினைத்து குயின்சியின் டவளை எடுத்து ஈரமான உடலை மறைத்துக் கொண்டு செல்வதை நீச்சல் குளத்தில் இருக்கும் குயின்சி காண்கிறார். உடனே என் டவளை ஏன் எடுத்தாய் என குயின்சி, ஜனனியை நோக்கி கத்திவிடுகிறார்.

அதன் பின் குயின்சி , ஜனனியை கடிந்து கொண்டது தன்னை தவறாக வெளியில் பிரதிபலிக்க வைத்துவிடும் என நினைத்திருக்கலாம். குயின்சி , ஜனனியிடம் தனது நியாயத்தை சொல்ல முயல்கிறார். அப்போது ஜனனி தான் தெரியாமல் எடுத்துவிட்டமைக்கு மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார். விவாதம் நிற்காது அதிகரிக்கவே ஜனனி , குயின்ஸியின் காலில் விழுந்து மன்னித்துக் கொள் என்கிறார்.

அத்தோடு குயின்சி அதை விட்டிருக்க வேண்டும். தொடர்ந்து அவர் ஜனனியிடம் தனது நியாயங்களை பேசத் தொடங்குகிறார். தான் வீட்டில் கூட , தனது பொருட்களை யாரும் தொடுவதை விரும்புவதில்லை என சொல்வதிலிருந்து பிரச்சனை நீண்டு போகிறது.

இதனால் வெறுப்புக்குள்ளான ஜனனி , கையில் இருந்த தேனீர் கப்பை போட்டு உடைக்கிறார். அதைப் பார்த்த குயின்சியும் அதிர்ந்து போகிறார்.

அதேபோல அங்கு பங்கு பற்றும் கலைஞர்களும் அதிர்ந்து போகிறார்கள்.
வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.