‘நோட்ஸ் இல்ல.. சரசரனு பேசுவேன்.. மொழிபெயர்க்க முடியுமா?’ – போனில் பேசிய அமித்ஷா

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிரிக்கெட் வீரர் தோனி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியபோது அவருடைய பேச்சை மொழி பெயர்த்தவர் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ். மேடையில் பேசிய அமித்ஷா குறிப்பு ஏதுமின்றி படபடவென பேசினார். அவருடைய வேகத்துக்கு இணையாக மொழி பெயர்த்தார் ஸ்ரீகாந்த் கருணேஷ். பொதுவாக வடமாநில தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் மொழிபெயர்ப்பு சிக்கலாக இருக்கும் நிலையில் நேற்றைய கதை வேறுமாதிரியாக இருந்தது.

முன்னதாக அமித்ஷாவின் பேச்சை மொழி பெயர்க்க வேண்டுமென்று சில மணி நேரத்துக்கு முன்னதாகவே ஸ்ரீகாந்த் கருணேஷுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று இருந்த நிலையில் காலை 9.30 மணிக்கே ஸ்ரீகாந்த் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்துள்ளார். திடீரென வந்த போன்காலில் அமித்ஷா பேசியுள்ளார். அப்போது ” நான் நோட்ஸ் எதுவும் வைத்திருக்கவில்லை.

குறிப்பு இல்லாமலேயே பேசுவேன். என்ன பேசுவேன் என எனக்கே தெரியாது. உங்களால் மொழிபெயர்க்க முடியுமா ? அதற்கு நீங்கள் தயாரா எனக் கேட்டுள்ளார். அதற்கு தன்னம்பிக்கையாக பதிலளித்த ஸ்ரீகாந்த், என்னால் முடியும் எனக் கூறியுள்ளார். உங்களிடம் பேப்பர், பேனா இருக்கிறதா என அமித்ஷா கேட்கவே, என்னிடம் பேப்பர் பேனாவும் இருக்கிறது. தன்னம்பிக்கையும் இருக்கிறது என பதிலளித்து அசரவைத்துள்ளார் ஸ்ரீகாந்த். அவருடைய பேச்சைக்கேட்ட அமித்ஷா ஸ்ரீகாந்தை பாராட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.