மூத்த பத்திரிகையாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய காலமானார்.

மூத்த பத்திரிகையாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய அவர்கள் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ‘திவயின’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நீண்ட காலம் பணியாற்றிய அவர், வெளிநாட்டு செய்தி ஆசிரியர் மற்றும் போர் செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கீர்த்தி வர்ணகுலசூரிய தனது பத்திரிகை வாழ்க்கையை முதலில் ‘ஜனதின’ பத்திரிகையில் தொடங்கினார். பின்னர் ‘திவயின’ பத்திரிகையில் இணைந்து அதன் ஆசிரியர் குழுவில் பல்வேறு பதவிகளை வகித்து நீண்ட காலம் பணியாற்றினார்.

அவரது வெளிநாட்டு செய்திகள் சில சமயங்களில் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின.

மரணமடையும் போது 73 வயதான கீர்த்தி வர்ணகுலசூரிய, வாராந்திர ‘திவயின இரிதா சங்கரஹய’வுக்கு பாதுகாப்பு கட்டுரைகள் தொடரையும் எழுதி வந்தார். இந்த தொடர் கட்டுரைகள் வாசகர்களிடையே பிரபலமாக இருந்தன. வர்ணகுலசூரியவின் மனைவி திஸ்னா சில காலத்திற்கு முன்பு காலமானார்.

ஓய்வு பெற்ற பிறகு, அவர் தனது சகோதரர் அஜித் வர்ணகுலசூரியவின் ராகமவில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது கடைசி விருப்பப்படி அவரது உடல் அடக்கம் எளிமையாக நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.