“நாங்கள் கடந்த தேர்தலில் வென்றது, மக்கள் பழைய இரண்டு கட்சிகளை வெறுத்ததால் மட்டுமே – என பிரதி அமைச்சர் டீ.பி. சரத்

“நாங்கள் வெற்றி பெற்றது அந்த இரண்டு கட்சிகள் மீதுள்ள வெறுப்பால் மக்கள் போட்ட வாக்குகளால் தான், நாங்கள் நல்லவர்களாக மாறியதால் அல்ல” என NPP பிரதி அமைச்சர் டீ.பி. சரத் கூறியுள்ளார்.
சமீபத்திய தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது, மக்களுக்கு பழைய இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்றானதால் தான் என்றும், நாங்கள் நல்லவர்களாக மாறியதால் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
“இந்த முறை நாங்கள் வெற்றி பெற்றது மக்களுக்கு அந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்றானதால் தான். வெறுப்பு தான் வாக்குகளாக மாறியது, அன்பு மற்றும் கருணை வாக்குகளாக மாறவில்லை” என்று அவர் கூறினார்.