கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மரணம்: விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொள்கிறது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொஸ்கொடவைச் சேர்ந்த 28 வயதுடைய தரிந்து சிரிவர்தன சொய்ஸா என்பவர் பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
6 கிராம் 210 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. இளைஞன் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் முதலில் கூறியிருந்தது.
எனினும், உயிரிழந்த இளைஞனின் தந்தை நிமல் சிரிவர்தன டி சொய்ஸா, தனது மகன் கைது செய்யப்பட்டபோது கொஸ்கொட பொலிஸ் அதிகாரிகள் அவரை கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (மே 3) முதல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.