பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல்!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இல்லாமாபாத்தின் முடீர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளம் ஆகியவற்றைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியது.
போர் விமானங்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும்,விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்த தாக்குதலில் போர் விமானங்கள் உள்பட எந்தச் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பாகிஸ்தான் தெரிவித்தது.