வவுனியாவில் ரெலோவின் உயர்மட்டக் கலந்துரையாடல்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
ரெலோவின் சமகால அரசியல் நிலைவரங்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முடிவடைந்துள்ள நிலையில் சபைகளில் ஆட்சியமைப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்டன என்று அறியமுடிகின்றது.
கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், கட்சியின் முக்கியஸ்தர்களான ஹென்றி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார், சுரேன் குருசாமி உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.