தெலங்கானாவில் சர்ச்சைக்குரிய சம்பவம்: உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய பெண்கள்

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக 109 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தியாவுக்கு வருகை புரிந்தனர்.

இதனிடையே தெலங்கானா சுற்றுலாத் துறை சார்பில் போட்டியாளர்கள் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்திலுள்ள ராமப்பா கோயிலுக்குச் சென்றிருந்த அழகிப் போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவி விடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இதற்கு பலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது காலனித்துவ மனப்பான்மையிலான செயல் என பலர் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷண் ரெட்டியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.