இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை – மேலும் இருவர் படுகாயம்

இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி – எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ரயில் கடவைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தமல்கொட, கட்டஹட்ட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வன்முறைக் கும்பல் ஒன்று மூன்று நபர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியது.

காயமடைந்தவர்கள் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.