பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது! – லால் காந்தவும் தெரிவிப்பு.

பிரதமர் பதவியில் மாற்றம் வராது எனவும், தேசிய மக்கள் சக்தி மேலும் விஸ்தரிக்கப்படும் எனவும் அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்திக்குள் மோதல் மூண்டுள்ளது எனவும், பிரதமர் பதவியை மாற்றுவதற்காக அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய மக்கள் சக்திக்குள் உள்ளக மோதலாம், அமைச்சரவையும் மாற்றப்படவுள்ளதாம் என்றெல்லாம் கருத்துக்களை முன்வைப்பவர்களின் மூளையை நிச்சயம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். எதிரணி என்றால் எதையாவது கூற வேண்டும் என்பதற்காகவே இப்படியான கதைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அவை அப்பட்டமான பொய்யாகும்.

தேசிய மக்கள் சக்தி மேலும் விஸ்தரிக்கப்படும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் அதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. கொழும்பு மாநகர சபையில் எமது ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.