உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இன்று….
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த தென் ஆப்ரிக்கா (69.44 சதவீதம்), ஆஸ்திரேலிய (67.54) அணிகள் பைனலுக்கு முன்னேறின. இந்திய அணி (50.00) மூன்றாவது இடம் பிடித்து வெளியேறியது.
தென் ஆப்ரிக்க அணியை பொறுத்தவரையில் 1998ல் சாம்பியன்ஸ் டிராபி மட்டும் வென்றது. மற்றபடி ஐ.சி.சி., நடத்தும் எந்த தொடரிலும் சாதித்தது இல்லை.
எனினும் கடந்த இரு ஆண்டில் 30 வீரர்களை களமிறக்கி, சரியான பேட்டர்கள், பவுலர்களை கண்டறிந்து, கடைசியாக பங்கேற்ற 7 டெஸ்டிலும் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியுள்ளது.
பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 30.78 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. தோற்கும் அணிக்கு ரூ. 18 கோடி தரப்பட உள்ளது. கடந்த 2023ல் வென்ற அணிக்கு ரூ. 13.70 கோடி, தோற்ற அணிக்கு ரூ. 6.84 கோடி தரப்பட்டன.
