இன்று நள்ளிரவு முதல் தொடங்கவிருந்த ரயில்வே வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.
இன்று நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பொது மேலாளருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக இலங்கை ரயில்வே ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. பிரசாத் தெரிவித்தார்.
பல கோரிக்கைகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டதை அடுத்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
