காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்பு!
மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம், கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்டது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ பகுதியைச் சேர்ந்த வேலு மருதமுத்து (வயது 55) நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை முதல் காணாமல்போயிருந்தார்.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் தேடுதல் வேட்டை ஆரம்பமானது.
இந்நிலையிலேயே இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
