பிரிந்து வாழ விருப்பமில்லை: ஒரே வாலிபரை கரம்படித்த 3 சகோதரிகள் – இணையத்தில் வைரலாகும் சம்பவம்!

இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மூன்று பெண்களை திருமணம் செய்துகொண்டது வைரலாகியுள்ளது.

சகோதரிகள்
உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவின் ஹசன்பூரைச் சேர்ந்த சகோதரிகள் சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சன்டோஷ் (18).

இவர்கள் மூவரும் சமூக வலைத்தளங்களில் Content Creators ஆக உள்ளனர். இவர்களுக்கு கமெரா வேலை செய்யும் ஒளிப்பதிவாளர் விகாஸ்.

கடந்த 17ஆம் திகதி விகாஸை சகோதரிகள் மூன்று பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் சாமுண்டா மாதா கோவிலில் நடந்துள்ளது.

உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட நினைத்தோம்
இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் இணையத்தில் வெளியாகின. இது பரவலான விவாதத்தையும், விமர்சனங்களையும் தூண்டியது.

விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த மூத்த சகோதரி சரோஜ், “நாங்கள் சிறுவயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்; பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

திருமணம் எங்களைப் பிரித்துவிடும் என்பதை உணர்ந்தபோது, உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட நினைத்தோம். பின்னர் இறப்பதற்குப் பதிலாக, நாங்கள் ஒன்றாகவே இருந்து ஒரே நபரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் அனைவரும் வயது வந்தவர்கள்; இந்த முடிவை விருப்பத்துடனேயே எடுத்தோம்” எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.