யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த ரயிலில் மோதி ஆண் ஒருவர் மரணம்!
ரயிலில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிராவஸ்திபுர ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 57 வயதுடைய கண்டிப் பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
