ஓட்டோ சாரதி ஒருவர் துப்பாக்கியுடன் கைது!

துப்பாக்கியுடன் ஓட்டோ சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

மெனிக்ஹின்ன பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மெனிக்ஹின்ன பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது எனப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெனிக்ஹின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.