விவாகரத்தைக் கொண்டாடிய மகன், தாய்: மகாராஷ்டிராவில் கேக் வெட்டி, பாலபிஷேகம் செய்து உற்சாகம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்ததோடு, மனைவி கொண்டு வந்த 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மகனுக்கு புதிய வாழ்க்கையை தொடங்கும் விதமாக அவரின் தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

விவாகரத்துக்குப்பின் தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் இந்த இளைஞர் பதிவிட்டுள்ளார். இணையவாசிகளை இளைஞனின் செயல் திகைக்க வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.