அனுராதபுரத்தில் கோர விபத்து! உயர்தர மாணவன் உயிரிழப்பு!! – பலரின் நிலைமை கவலைக்கிடம்.
அனுராதபுரம், தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ – ஜயகங்க சந்தி பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 36 பேர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது என்று வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மேலும் 10 பேர் தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலாவயில் இருந்து பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ்ஸே வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் உட்பட சுமார் 60 பேர் வரை பஸ்ஸில் பயணித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
