பேரிடரால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர்.

அத்துடன் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் 1,800 வீடுகள் முழுமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

8 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 870 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.