2010 முதல் 2025 வரையான காலப் பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகளை விசாரிப்பதற்கு ஆணைக்குழு – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை.
கொழும்பு மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்றன என்று கூறப்படும் ஊழல்,மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பியசேன ரணசிஹ்க தலைமையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் மூவர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்கிரமசிங்ஹ, கணக்காய்வாளர் சேவை அதிகாரி ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க ஆகியோரும் மேற்படி குழுவுக்குப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2010 முதல் 2025 வரையான காலப் பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளன எனக் கருதப்படும் ஊழல், மோசடி, சொத்துக்களின் குற்றவியல் ரீதியான கையாடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தக் குழு விசாரணை நடத்தவுள்ளது.
அதன்பின்னர் தனது பரிந்துரை அறிக்கையை மேற்படி குழு, ஜனாதிபதியிடம் கையளிக்கும்.
