டக்ளஸுக்கு இன்று பிணை கிடைக்குமா?
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மீண்டும் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட இருக்கின்றார்.
இன்றைய தினம் பாதுகாப்பு மற்றும் மருத்துவ விவகாரங்களைக் காரணம் காட்டி டக்ளஸ் தேவானந்தாவைப் பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விரிவான விவாதத்தை மன்றில் சமர்ப்பணம் செய்வார்கள் எனத் தெரிகின்றது.
எது, எப்படியாயினும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு நீதிவான் நீதிமன்றத்தில் பிணை அனுமதி கிடைப்பது பெரும்பாலும் சாத்தியமற்றது என்கின்றன சட்ட வட்டாரங்கள்.
நீதிவான் நீதிமன்றத்தில் முதல் கட்டமாகப் பிணைக்கான கோரிக்கையை முன்வைத்து பார்த்த பின்னரே, அடுத்த கட்டமாக மேல் நீதிமன்றத்தில் டக்லஸ் தேவானந்தாவை விடுவிப்பதற்கான பிணை மனுத் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகின்றது.
