ஓட்டோ மோதி வயோதிபர் பலி! – சாரதி தப்பியோட்டம்.

ஓட்டோ மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த வயோதிபர் மீதே ஓட்டோ மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் அவிசாவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய ஓட்டோவின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபரைக் கைது செய்ய அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.