அம்புலன்ஸ் மோதியதில் சிதைந்தது ஓட்டோ ஒருவர் பலி; நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில்..

குருநாகல் – குளியாப்பிட்டி பிரதான வீதியின் லபுயாய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அதிவேகமாக வந்த அம்புலன்ஸ் வாகனமும், எதிரே வந்த ஓட்டோவும் லபுயாய பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தின் வீரியத்தில் ஓட்டோ பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த ஐவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய நால்வரும் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அம்புலன்ஸ் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.