நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இன்றைய எரிபொருள் வரிசைக்குத் தீர்வு கண்டிருப்பேன்! – இப்படிக் கூறுகின்றார் பத்தரமுல்ல சீலரத்ன தேரர்.

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள எரிபொருள் வரிசை யுகத்துக்குத் தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உரிய தீர்வை வழங்கியிருப்பேன் என்று ஜன செத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் இருந்த அதே வரிசை தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் காலத்துக்கும் வந்துள்ளது. அநுரவின் இந்த வரிசை அடுத்து யாருக்குச் செல்லப்போகின்றது என்று தெரியவில்லை.” – என்றார்.

மக்களை வீதிகளில் காக்க வைக்கும் இந்த வரிசை கலாசாரம் குறித்துக் கவலை வெளியிட்ட அவர்,

“மக்கள் வரிசையில் நின்று நின்று சோர்ந்து போயுள்ளனர். இறுதியில் அந்த வரிசை எனக்கும் வருமா என்று தெரியவில்லை. ஆனால், நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இந்த எரிபொருள் வரிசைப் பிரச்சினைக்கு முறையான மற்றும் சரியான தீர்வுகளை எப்போதோ வழங்கியிருப்பேன்.” – என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.