அமைச்சர் அனுர கருணாதிலகவினால் இந்தியத் துணை ஜனாதிபதி இராதா கௌரவமாக வழியனுப்பி வைப்பு!
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டு இன்று திங்கட்கிழமை பிற்பகல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட துணை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வழியனுப்பி வைப்பதற்காக அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் உடனிருந்தார்.





