பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் மோதி சாவகச்சேரியில் கோர விபத்து! குருநகரைச் சேர்ந்த ஒருவர் பலி!!
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் பாரவூர்தியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பாரவூர்தியும் ஏ – 9 வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
நேற்று இரவு இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் றொபின் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்துத் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், அவரைச் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


