வெவ்வேறு விபத்துகளில் மூவர் பரிதாப உயிரிழப்பு!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற கோர வீதி விபத்துகளில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஹட்டன் – கொழும்பு வீதியின் கபுலுமுல்ல பகுதியில், கரவனெல்ல நோக்கிப் பயணித்த ஓட்டோ ஒன்று எதிரே வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோ சாரதியான எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி கரவனெல்ல வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

விபத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், பஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பல்லபான பகுதியில், வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பக்கத்தில் ஓட்டோ ஒன்று மோதியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில், ஓட்டோவின் பின்னால் அமர்ந்து பயணித்த ஹெம்மாதகம பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பொரளை வார்ட் பிளேஸ் பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த ஹபரணை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். காரின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.