ஜூலை 6ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் உயர்வு! – குறைந்தபட்ச கட்டணம் 34 ரூபாவாக அதிகரிப்பு.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து எதிர்வரும் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

இது குறித்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,

“தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி, தற்போது 30 ரூபாவாகக் காணப்படும் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 34 ரூபாவாக அதிகரிப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 100 கிலோமீற்றர் வரையான குறுகிய தூரப் பயணங்களுக்கான பஸ் கட்டணங்களை 12 வீதத்தாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட நீண்டதூரப் பயணங்களுக்கான கட்டணங்களை 20 வீதத்தாலும் அதிகரிப்பதற்கும் இதன்போது இருதரப்பிலும் ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.