செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் மீட்பு! – மொத்த எண்ணிக்கை 491 ஆக உயர்வு.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 8 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 491 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட 44ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது புதிதாக 8 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 491 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 489 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.