இந்திய உயர்ஸ்தானிகர் – சிறீதரன் எம்.பி. திடீர் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.


இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு:-

சமகால அரசியல் நிலவரங்கள்:

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மாகாண சபைத் தேர்தல்:

நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி சார்ந்த பிற முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

துறைமுக மேம்பாடு:

வட பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழும் காங்கேசந்துறை துறைமுகத் திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்தி பிராந்திய தொடர்பாடலை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.