கம்பஹா கடலில் மூழ்கிக் காணாமல்போன தாய், இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு! – சிறுவனைத் தேடும் பணி தீவிரம்.

கம்பஹா – பமுனுகம – எபமுல்ல பகுதியில் கடலில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமான 35 வயதுப் பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இவர்களுடன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை எபமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்றுகொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட வலுவான கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டே நால்வரும் காணாமல்போயிருந்தனர்.

கடலில் தேடுதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அனர்த்தத்தில் சிக்கிய 35 வயதுடைய தாயும், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் மாயமான 13 வயது சிறுவனைக் கண்டுபிடிக்கும் பொருட்டு கடற்படையினரின் உதவியுடன் பொலிஸார் தொடர்ந்தும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.