22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு! – பிரதம நீதியரசர் தலைமையில் ஐவர் அடங்கிய ஆயம் நியமனம்.
அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆட்சேபனை தெரிவித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனுக்களைப் பரிசீலனை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயத்தின் தலைவராகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன செயற்படவுள்ளார்.
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கீஹான் குலதுங்க ஆகியோர் இந்த ஆயத்தின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
