காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் மரணம்!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிதுவ பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஆண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சேருநுவர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவராவார்.

மேற்படி நபர் தனது வீட்டுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்த வேளையிலேயே திடீரென அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.