வாவியில் குளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கிப் பரிதாப உயிரிழப்பு!

களுத்துறை, பதுரலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்தோல பகுதியில் உள்ள வாவியில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததை அடுத்துப் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பெல்லன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

இது குறித்து பதுரலிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.