நடுவானில் ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயற்சியா? – ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்!

புதுடெல்லி

ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்த முயற்சியா? என்பதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து டெல்லியை நோக்கி ஏ.ஐ.-2030 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு வந்தது. அப்போது, நடுவானில் 7500 என்ற எண் கொண்ட குறியீட்டை ஆமதாபாத் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு சில வினாடிகள் வரை விமானி அனுப்பியுள்ளார்.

அதிகாரிகள் உஷார்
விமான கடத்தல் தொடர்பான இந்த குறியீட்டால், பாதுகாப்பு அதிகாரிகள் உஷாரானார்கள். இதனை அடுத்து அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை திருப்பி விடப்பட்ட அந்த விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

விமானத்தில் இருந்த விமானிகள் மற்றும் பயணிகள் என அனைவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், வெளியே கொண்டு வரப்பட்டனர்.

நிபுணர்கள் சோதனை
இதன்பின்னர், விமானம் தனியாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. சி.ஐ.எஸ்.எப் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபடுகின்றனர். விமானி ஏன் இந்த சிக்னலை அனுப்பினார் என்ற விவரம் உடனடியாக தெரிய வரவில்லை.

இதுதொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் தரப்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஏர் இந்தியா விமான கடத்தலுக்கான முயற்சியா? இது என்றும் விசாரிக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.