மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி வெளிநாடு பறக்கத் தயாராகும் கோட்டா! – பயணத் தடையை நீக்குமாறு கோரி நீதிமன்றில் மனு.

மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், மருத்துவக் காரணங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாடுகளைத் தற்காலிகமாகத் தளர்த்துவதற்கே இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.