மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஞாயிறன்று!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு எனும் கொடிய அரக்கனை கிராமத்திலிருந்து விரட்டும் செயற்றிட்டத்தின் இந்த ஆண்டுக்கான நகர்வினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27-11-2022) காலை 8.30 மணிமுதல் ஆரம்பிக்கவுள்ளோம்!

இளவாலை கிராமத்தவர்களை தங்கள் வீடுகள் தோறும் இருக்கின்ற டெங்கு நுளம்பு பெருக ஏதுவான பொருட்களை அகற்றி, அப்புறபடுத்தவேண்டிய ஏனையவற்றை சேகரித்து வீடுகளில் பொதி செய்து வைத்துக்கொள்ளுமாறு கோரபடுவதுடன், வீடுகள் தோறும் எமது சங்க உறுப்பினர்கள் சென்று அவற்றை திரட்டி உரிய முறையில் அப்புறப்படுத்துவற்காக வலிவடக்கு பிரதேச சபையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்!

இச் செயற்றிட்டம் தொடர்பான அறிவித்தல்கள் கிராமத்தவர்களுக்கு நகரும் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது! இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெற்றிபெற கிராம மக்களின் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறனர்!
மற்றும் இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழமைபோன்று வலிவடக்கு பிரதேச சபையினர் வழங்கவுள்ளனர்!

Leave A Reply

Your email address will not be published.