ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி பாதியில் கலைந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்துகொண்ட மே தின பேரணி இன்று (1) தலவாக்கலை நகரில் நடைபெற்றது.
அங்கு சஜித் பிரேமதாஸ தனது மே தின உரையை முடித்த பிறகு, வேறு அவசர வேலை இருப்பதாகக் கூறி அந்த இடத்தை விட்டு வெளியேறியதும், மே தின பேரணியில் கலந்துகொண்ட கட்சித் தொண்டர்களும் கலைந்து சென்றனர்.
மே தின பேரணி இன்னும் முடியவில்லை என்றும், கலைந்து செல்ல வேண்டாம் என்றும் பலமுறை மக்களுக்கு அறிவிக்கப்பட்டும், அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
இதனால் எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்குப் பிறகு மே தின பேரணியில் உரையாற்ற காத்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ஷ டி சில்வா மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு பேசும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.