மூளைச்சாவடைந்த இளைஞரால் 8 பேருக்கு மறுவாழ்வு

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

25 வயதே ஆன அன்மோல் ஜெயின், நவம்பர் 17ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். அவரது தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க குடும்பத்தினர் முன்வந்தனர். இதனால், அவரது கண்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் என 8 உடல் உறுப்புகள், போபால், இந்தூர், ஆமதாபாத் நகரங்களில், உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்குப் பொறுத்தப்பட்டது.

உடல் உறுப்புகளை ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு விரைவாக எடுத்துச் செல்ல மூன்று வழித்தடங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் போக்குவரத்து இல்லா பாதையாக மாற்றப்பட்டு, நோயாளிகளுக்கு விரைவாக உடல் பாகங்கள் சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.